May 18, 2019 தண்டோரா குழு
உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அதிகாரப்பூர்வ பாடலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
12 வது உலககோப்பை கிரிக்கெட் போட்டி 2019 இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அத்தொடருக்கான அதிகாரப்பூர்வ பாடலை வெளியிட்டு உள்ளது. ஸ்டான்ட் பை என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பாடலை இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பாப் பாடகர் லாரின் பாடி உள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தூதர் பிளிண்ட்டாப், பாடகர் லாரின் ஆகியோர் இணைந்து இந்த பாடலை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.