April 8, 2019 தண்டோரா குழு
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி ஏப்ரல் 15-ஆம் தேதி மும்பையில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (2019) இங்கிலாந்தில் மே 30–ந்தேதி முதல் ஜூலை 14–ந்தேதி வரை நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 10 நாடுகள் இந்த போட்டி தொடரில் பங்கேற்கின்றன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இப்போட்டி ஜூன் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை கொடுப்பதற்கு ஏப்ரல் 23-ஆம் தேதி கடைசி தேதியாகும். இந்நிலையில், இந்தப் போட்டிக்கான இந்திய அணி தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான இந்திய கிரிக்கெட் நிர்வாகிகள் குழு ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது.
ஐ.பி.எல். போட்டிகள் முடிந்த சில தினங்களில் உலக கோப்பை தொடர் தொடங்க உள்ளது. உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வரும் 15 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு, இந்திய அணியை தேர்வு செய்து அறிவிக்கும். ஐ.பி.எல். தொடரில் வீரர்களின் விளையாடும் விதத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு தேர்வுக்குழு அணியை அறிவிக்கும் என்று சொல்லப்படுகிறது.