September 21, 2019 தண்டோரா குழு
உலக மல்யுத்த போட்டியின் 86கி எடை பிரிவில் இந்திய வீரர் தீபக் பூனியா கொலம்பிய வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
உலக மல்யுத்த போட்டியில் அரை இறுதிக்கு இந்திய வீரர்கள் தீபக் புனியா, ராகுல் அவேர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். 86 கிலோ எடைப்பிரிவில் தீபக் புனியாவும் 61 கிலோ எடை பிரிவில் ராகுல் அவேரும் அரை இறுதிக்கு முனேற்றம் அடைத்துள்ளனர். காலிறுதியில் கோலிம்பியா வீரர் காரலோசை 7-6 என்ற புள்ளி கணக்கில் தீபக் புனியா வீழ்த்தினார். மற்றொரு காலிறுதிப் போட்டியில் ஆசிய சாம்பியனான ரசூல் கலியேவை 10 – 7 என்ற புள்ளி கணக்கில் ராகுல் அவேர் வென்றார்.
உலக மல்யுத்த அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியதை அடுத்து 2020 ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர் தீபக் புனியா தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.