June 23, 2017
tamil.samayam.com
இந்திய ஆண்கள் அணிக்கு கிடைக்கும் மரியாதை தங்களுக்கு கிடைப்பதில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை தொடர்ந்து லண்டனில் ஐசிசி பெண்கள் உலகக் கோப்பை நடக்கிறது. நாளை முதல் பிரதான போட்டிகள் துவங்குகிறது. இதில் இந்திய பெண்கள் அணி, தனது முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர் கொள்கிறது.
இதற்கு முன்னதாக, நடந்த டின்னரில் இந்திய பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜ் பங்கேற்றார். அதன்பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ஒரு பத்திரிக்கையாளர் உங்களுக்கு பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் யார் என கேட்க மிதாலி ராஜ் கடுப்பகிவிட்டார்.
இதன்பின் மிதாலி ராஜ் கூறுகையில்,’ஆண்கள் சாம்பியன் டிராபி கிரிக்கெட் பைனலுக்கு முன், ஆண்கள் கிரிக்கெட் வீரர்களிடன் உங்களுக்கு எந்த பெண் கிரிக்கெட் வீராங்கனை பிடிக்கும் என்ற கேள்வியை கேட்டீர்களா? என்னிடம் மட்டும் எப்போதும் கேட்கும் நீங்கள் அவர்களிடம் ஏன் கேட்பதில்லை. நாங்கள் எப்போதாவது டி-வி.,யில் தெரிகிறோம். ஆனால் அவர்கள் அப்படியல்ல. தற்போது பிசிசிஐ.,யின் கடுமையான முயற்சியால், ஓரளவு பிரமடைந்து வருகிறோம். ஆனால் எட்ட வேண்டிய தூரம் இன்னும் உள்ளது. ’ என்றார்.