March 2, 2018
tamilsamayam.com
இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் வரை ஓய மாட்டேன் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
2011 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வாங்கி அசத்தியவர் யுவராஜ் சிங். பின்னர் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். பல முயற்சிக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம்பிடித்தார். இருப்பினும் தாக்கு பிடிக்க முடியவில்லை.
கடைசியாக அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடினார். பின் அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட யுவராஜ் தேர்வாளார்கள் கண்டுகொள்ளவே இல்லை.
2019 வரை விளையாடுவேன் :
இநிலையில் அடுத்தாண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைப்பெற உள்ளது. அதற்குள் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்பதே என் லட்சியம். அதனால் இந்தாண்டு நடைப்பெறும் ஐபிஎல் போட்டி எனக்கு முக்கியமானது. 2019ம் ஆண்டுக்கு பின்னரே என் ஓய்வு குறித்து யோசிப்பேன் என தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்காவில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. டெஸ்ட் தொடரை இழந்தாலும், போராட்ட குணத்தை மறக்காமல் ஒருநாள், டி20 தொடரை வென்று 3 தொடரில் 2ல் வென்று சாதித்துள்ளது. கோலி சிறப்பாக ரன் குவித்து அணி வெற்றிக்கு உதவினார் என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.