May 18, 2017
tamilsamayam.com
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெறும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் லீக் போட்டிகள் முழுவதுமாக முடிந்த நிலையில், பிளே ஆப் சுற்றுகளுக்கு மும்பை, புனே, ஐதராபாத், கொல்கத்தா அணிகள் தகுதி பெற்றன.
மும்பையில் நடந்த தகுதிச்சுற்றின் முதல் போட்டியில், புனே அணி மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றது. இன்று பெங்களூருவில் நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் ஐதராபாத் அணி, கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. இதில் தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும். வெல்லும் அணி, இரண்டாவது தகுதிச்சுற்றில், மும்பை அணியை எதிர்கொள்ளும்
இந்நிலையில், இன்றைய எலிமினேட்டர் போட்டியில் ஐதராபாத் வெற்றி பெற் அதிக வாய்ப்பு உள்ளதாக, முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து பாண்டிங் கூறுகையில்,
ஆஸ்திரேலிய அணியின் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என தொடர்கள் வென்றதன் அடிப்படையில் , ஐபிஎல் தொடரின் பாதையை சுலபமாக கணிக்க முடியும். 9 வாரங்கள் ஒரே மாதிரியாக கிரிக்கெட் விளையாடுவது மிகவும் கடினமான விஷயம். ஆனால் அதை ஐதராபாத் அணி தற்போது சிறப்பாக செய்கிறது. இதற்கு வார்னர், யுவராஜ், தவான் உள்ளிட்ட சர்வதேச வீரர்களின் ஆதரவும் ஒரு காரணம். ஆனால் கொல்கத்தா அணி, பேட்டிங்கில் தடுமாறுகிறது. ‘ என்றார்.