February 21, 2017
tamilsamayam.com
ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி, தனது மகிழ்ச்சியை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,). இதில் இந்திய நட்சத்திரங்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்பதால், ரசிகர்கள் மத்தியில் இத்தொடருக்கான வரவேற்பு எப்போதும் எகிறியே காணப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல்., அட்டவணையை இந்திய கிரிக்கெட் போர்டு ([பி.சி.சி.ஐ.,) சமீபத்தில் வெளியிட்டது. வரும் ஏப்ரம் 5ல் துவங்கும் இதன் முதல் போட்டி மே 21 வரை நீடிக்கிறது. 47 நடக்கும் இத்தொடரில் மொத்தம் 60 போட்டிகள் நடக்கிறது.
இதற்கான வீரர்கள் ஏலம் இன்று பெங்களூருவில் நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் அணிக்காக பங்கேற்க ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி, ரூ. 30 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டுவிட்டரில், ’ சன் ரைசர்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டது எனக்கு மட்டுமல்ல ஆப்கானின் ஜூனியர் வீரர்களுக்கும் புது உற்சாகத்தை அளித்துள்ளது. என அதில் பதிவிட்டுள்ளார்.