July 21, 2020 தண்டோரா குழு
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறும் என ஐபில் தலைவர் கூறியுள்ளார்.
ஐபிஎல் 2020 போட்டிகள் மார்ச் மாதம் 29-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. இதையடுத்து, கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மார்ச் 29ஆம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஐ.பி.எல் போட்டிகள் எப்போது நடைபெறும் என பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இந்நிலையில், இந்தாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து அரசின் அனுமதி கோரியிருக்கிறோம். இது பற்றி ஐபிஎல் ஆட்சி மன்ற கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்றார்.