May 2, 2017
tamilsamayam.com
சர்வதேச ஒருநாள் அரங்கில் இந்திய அணி, மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.
சர்வதேச ஒரு நாள் அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி வெளியிட்டுள்ளது . இதில் இந்திய அணி ஐந்து புள்ளிகள் அதிகம் பெற்று, மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. இந்திய அணி தற்போது 117 புள்ளிகளுடன், மூன்றாவது இடத்தில் உள்ளது. நியூஸிலாந்து அணி, 115 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.
இப்பட்டியலில், தென் ஆப்ரிக்க அணி, 123 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 118 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது. இலங்கை ஆறாவது இடம், வங்கதேசம் ஏழாவது இடம், பாகிஸ்தான் எட்டாவது இடம், மேற்கு இந்திய தீவுகள் ஒன்பதாவது இடம் மற்றும் ஆப்கானிஸ்தான் பத்தாவது இடத்தில் உள்ளது. ஜிம்பாப்வே (11), அயர்லாந்து 12-வது இடத்தில் உள்ளன.