• Download mobile app
11 Apr 2025, FridayEdition - 3348
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐசிசி விருதிலும் சாதனை படைத்த விராட் கோலி !

January 22, 2019 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 2018ம் ஆண்டு சிறந்த ஆண்டு தான் ஏனெனில், கடந்த ஆண்டில் மட்டும் 13 டெஸ்டில் விளையாடி 5 சதங்களுடன் 1,322 ரன்கள் எடுத்தார். அவரது பேட்டிங் சராசரி 55.08. 14 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 6 சதங்களை விளாசி 1202 ரன்கள் எடுத்தார். இதில், அவரது பேட்டிங் சராசரி 133.55. அதேபோல், 10 டி-20 போட்டியில் களமிறங்கி 211 ரன்கள் எடுத்தார்.அதைப்போல், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை முதல் முறையாக வென்று வரலாறு படைத்தது இந்திய அணி.

இதற்கிடையில், ஆண்டுதோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதினை, அவர்களது செயல்பாட்டின் அடிப்படையில் ஐசிசி வழங்கி வருகிறது. அந்த வகையில் 2018 ஆம் ஆண்டுக்கான விருது பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது பட்டியலை இந்திய அணியின் கேப்டன் கோலி அலங்கரித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரர், டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரர், அனைத்து பிரிவுகளையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் என அனைத்து முக்கிய விருதுகளையும் இந்திய கேப்டன் கோலியே வென்றுள்ளார். இதுவரையிலான ஐசிசி கிரிக்கெட் விருதுகள் வரலாற்றில் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர் என அனைத்து விருதுகளையும் ஒன்றாக பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.

இந்த சிறப்புகள் மட்டுமல்லாமல், இந்த ஆண்டின் ஒருநாள் மட்டும் டெஸ்ட் அணிகளுக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார் . விராட். அவரோடு ஜஸ்ப்ரீத் பும்ராவும் இரண்டு அணியிலும் இடம்பெற்றுள்ளார். ரிசப் பன்ட் டெஸ்ட் அணியிலும், ரோஹித் ஷர்மா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் ஒருநாள் அணியிலும் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஐசிசி விருது மொத்தமும் இந்திய மயம்தான்.

வளர்ந்துவரும் இளம் வீரருக்கான விருதும் இந்தியாவுக்கே! அந்த விருதை, விக்கெட் கீப்பர் ரிசப் பன்ட் வென்றுள்ளார். மேலும் ‘ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்’ என்று விருதினை நியூஸிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பெற்றுள்ளார்.

ஆண்டின் சிறந்த கிரிக்கெட்டர்’ விருதைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக பெறுவது ரிக்கி பான்டிங்குக்குப் பிறகு, கோலி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க