April 18, 2018
tamilsamayam.com
மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், பெங்களூரு அணி கேப்டன் கோலி புது சாதனை படைத்தார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல்., தொடரின் 14வது லீக் போட்டியில் மும்பை, பெங்களூர் அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி, மும்பை அணியிடம் 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், இதில் விராட் கோலி 92 ரன்கள் குவித்தார். இதன் மூலம், ஐபிஎல்., அரங்கில் அதிக ரன்கள் எடுத்த சென்னை வீரர் ரெய்னாவின் (4,558 ரன்கள்) சாதனையை முறியடித்தார்.தவிர,ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக 5,000 ரன்கள் கடந்தார் கோலி.
இதன் மூலம் ஒரே அணிக்காக 5,000 ரன்கள் அடுத்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார் கோலி. பெங்களூரு அணிக்காக ஐபிஎல்., அரங்கில் இதுவரை 153 போட்டியில் பங்கேற்றுள்ள கோலி 4619 ரன்களும், சாம்பியன்ஸ் லீக் டி-20 தொடரில் 424 ரன்கள் என மொத்தமாக 5043 ரன்கள் எடுத்துள்ளார் கோலி.
தவிர,மும்பை அணிக்கு எதிராக ஐபிஎல்.,அரங்கில் தனது 36வது சதத்தை பதிவு செய்த பெங்களூரு கேப்டன் கோலி,ஐபிஎல்.,அரங்கில் அதிக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை டெல்லி அணி கேப்டன் காம்பிருடன் (36 அரைசதம்) பகிர்ந்துகொண்டார். இப்பட்டியலில் டெல்லி,ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடிய டேவிட் வார்னர் (39 அரைசதம்) உள்ளார்.