March 22, 2019 தண்டோரா குழு
2019 ஐபிஎல் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் பெங்களூரு அணியின் கேப்டன் கோலி ஆகியோர் சேப்பாக்கம் மைதனாத்தில் பயிற்சியின் போது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கும் 12வது ஐபிஎல் தொடர் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில்லை விளையாட நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் அணியினர் சென்னை வந்தனர்.அப்போது தோனியும் கோலியும் சந்தித்துக்கொண்டனர்.
தற்போது அந்த புகைப்படம் சமுக வலைதலங்களில் வைரல் ஆகியுள்ளது.