• Download mobile app
05 Dec 2024, ThursdayEdition - 3221
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐபிஎல் டிக்கெட் தொகையை ராணுவ வீரர்களுக்கு வழங்க சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவு

March 22, 2019 தண்டோரா குழு

காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் ராணுவ விரார்களின் குடும்பங்களுக்கு, முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த வசூலை சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வழங்க உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கும் 12வது ஐபிஎல் தொடர் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டிக்கான தொடக்க விழா பிரமாண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில். அதற்கு செலவிட இருந்த தொகையை புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் ராணுவ விரார்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாளை தொடங்கவுள்ள 2019 ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் போதும் போட்டியின் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை 16ம் தேதி நடைப்பெற்றது. விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்களும் விற்பனை செய்யப்பட்டதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.மேலும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த தொகையை புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் ராணுவ விரார்களின் குடும்பங்களுக்கு நிதியாக வழங்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ‘இந்த தொகைக்கான காசோலையை இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினென்ட்டாக இருக்கும் சிஎஸ்கே கேப்டன் டோனி வழங்குவார்’ என்றும் நிர்வாகம் கூறியுள்ளது. ‘டிக்கெட் விற்பனை மூலம் எவ்வளவு தொகை வசூலானது’ என்பது குறித்து விரைவில் தெரிவிப்போம் என்று சிஎஸ்கே அணியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க