May 29, 2021 தண்டோரா குழு
எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரசு அமீரகத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்து 14 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் 4 வீரர்களுக்கு கொரோனா உறுதியானதையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 29 போட்டிகள் முடிந்த நிலையில், எஞ்சியப் போட்டிகள் எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது.
இந்நிலையில், ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் ஷூக்லா தெரிவித்துள்ளார். துபாய், சார்ஜா, அபுதாபியில் செப்.18 முதல் அக்.10-க்குள் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பிசிசிஐ தலைவர் கங்குலி தலைமையில் பொதுக்குழு கூட்டம் காணொலி மூலம் நடந்த நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.