April 26, 2021 தண்டோரா குழு
இந்தாண்டு ஐ பி எல் போட்டிகளில் இருந்து விலகுகிறார் டெல்லி கேப்பிட்டல் அணியின் ரவிச்சந்திரன் அஷ்வின் தன் குடும்பத்தினர் கொரோனோ தொற்று காரணமாக போராடி வருவதால் விலக முடிவு எடுத்துருப்பதாக டிவிட்டரில் பதிவு செய்து இருக்கிறார்.
அவர் தனது டுவிட்டர் பதிவில்,
2021 ஐபிஎல் தொடரிலிருந்து நாளை முதல் நான் விடைபெற்றுக் கொள்கிறேன். கொரோனா வைரஸுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் இந்த நேரத்தில் அவர்களுக்காக இந்த கடினமான நேரத்தில் உடன் இருப்பது அவசியம்.அனைத்தும் சரியான திசையில் சென்றால் நான் மீண்டும் அணியில் சேர்வேன் என எதிர்பார்க்கிறேன். நன்றி டெல்லி கேபிடல்ஸ் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த கடினமான தருணத்தில் அஸிவினுக்கு முழு ஆதரவு அளிப்பதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகமும் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
டெல்லி வீரர் அஸ்வினை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலிருந்து விலகினர் பெங்களூர் அணி வீரர்கள் ஆடம் சாம்பா, கேன் ரிச்சர்ட்சன். தனிப்பட்ட காரணங்களால் ஆஸ்திரேலியா திரும்ப உள்ளனர் என ஆர்சிபி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
ஏற்கனவே ஹைதராபாத் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் நடராஜன் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து சமீபத்தில் விலகியது குறிப்பிடத்தக்கது.