April 13, 2021 தண்டோரா குழு
பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் ஐபிஎல் போட்டியில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
யூனிவர்சல் பாஸ் என்றழைப்படும் கிறிஸ் கெயில் கடந்த 13 வருடங்களாக ஐபிஎலில் 133 ஆட்டங்களில் விளையாடி 4800 ரன்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளார். தற்போது பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் கிறிஸ் கெயில் ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஸ்டோக்ஸின் முதல் ஓவரில் சிக்ஸர் ஒன்றை அடித்தார்.
இதையடுத்து ஐபிஎல் போட்டியில் 350 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்கிற சாதனையை அவர் படைத்துள்ளார்.ஐபிஎல் போட்டியில் கெயில் இதுவரை 351 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் உள்ள டி வில்லியர்ஸ் 237 சிக்ஸர்களும் 3-வது இடத்தில் உள்ள தோனி 216 சிக்ஸர்களும் அடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.