March 31, 2017
tamil.samayam.com
ஐ.பி.எல்., துவக்க விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான சச்சின், சேவக், கங்குலி, டிராவிட், லட்சுமண் ஆகியோருக்கு ஐ.பி.எல்., நிர்வாகம் தனியாக கவனிக்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் டி-20 தொடரான ஐ.பி.எல்., தொடர், இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 5ல் துவங்குகிறது. இதற்கான துவக்க விழாவில் இந்திய கிரிக்கெட்டை இத்தனை ஆண்டுகாலமாக தோள் கொடுத்து தாங்கிய தூண்களாக திகழ்ந்த ஜாம்பவான்களான சச்சின், கங்குலி, டிராவிட், லட்சுமண், சேவக் ஆகியோரை கவுரவிக்க திட்டமிட்டுள்ளது.
இதில், இவர்களுக்கு இணையாக பங்களித்த சுழற்பந்து வீச்சாளர், தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளராகவுள்ள அனில் கும்ளே கலந்து கொள்வாரா என்ற விவரம் தெரியவில்லை.