August 29, 2020 தண்டோரா குழு
இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்) தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் வரும் செப்., 19 முதல் நவ.,10 வரை நடக்கிறது.
இதில் கலந்து கொள்ள சென்னை அணியினர், கடந்த ஆக.,21ல் துபாய் சென்றனர். ஓட்டலில் 6 நாட்கள் தனிமைபடுத்தப்பட்ட அவர்கள், முதற்கட்ட பயிற்சியை துவக்குவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையில்,சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் உட்பட மொத்தம் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், கூடுதலாக 7 நாட்கள் தனிமைபடுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், சென்னை அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா,இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார். சொந்த காரணங்களுக்காக அவர்,இந்தியா திரும்பியதாக சென்னை அணியின் சிஇஓ விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அவர், இந்த தொடரில் விளையாட மாட்டார் எனவும், சுரேஷ் ரெய்னா மற்றும் அவரது குடும்பத்திற்கு சென்னை அணி நிர்வாகம் முழு ஆதரவை வழங்கும் எனவும் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சின்ன தல என்றழைக்கப்படும் ரெய்னா திடீரென விலகியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.