May 8, 2018
tamilsamayam.com
ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் அணி பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த பெங்களூரு அணி ஹைதராபாத் அணியை 20 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது.147 ரன்களை சேஸ் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ப்ளே-ஆப் சுற்றுக்குச் செல்வதை உறுதிசெய்தது.பெங்களூரு அணிக்கு இந்தத் தோல்வியால் ப்ளே-ஆப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு தகர்ந்துள்ளது.
இப்போட்டியில் அரைசதம் அடித்து ஹைதராபாத் அணியின் ஸ்கோருக்கு வலுசேர்ந்த அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.