May 24, 2018
tamilsamayam.com
ஐபிஎல் 2018ல் அதிக ஏலத்தொகை கொடுத்து எடுக்கப்பட்ட இந்திய வீரர் என்ற பெருமையை ராஜஸ்தான் ராயல் அணியின் பெற்றார்.ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட தொகைக்கு ஏற்ப அவர் விளையாடவில்லை என்பது தான் நிதர்சனம் ஆகியுள்ளது.
ஐபிஎல் இந்த சீசனுக்கான போட்டிக்கு அணிக்காக ரூ. 11.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் ஜெய்தேவ் உனத்கட்.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல் அணிக்காக உனத்கட் 15 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.மேலும்,அந்த அணியில் கேப்டனாக பொறுப்பேற்ற ரஹானேவுக்கு ரூ. 4 கோடி வழங்கப்பட்ட நிலையில் உனத்கட்டுக்கு ரூ. 11.5 கோடி கொடுத்து மிக எதிர்பார்ப்புடன் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
ஆனால் 15 போட்டியில் 11 விக்கெட் எடுத்து பவுலிங் சராசரி 44.18 என்ற மோசமான சராசரி வைத்துள்ளார். அதோடு நேற்று நடந்த ஐபிஎல் வெளியேற்றும் நாக்-அவுட் போட்டியில் ஒரு ஓவருக்கு சராசரி 16.50 ரன்கள் வாரிவழங்கினார்.
இவர் 2 ஓவர்கள் வீசி 33 ரன்கள் விட்டுகொடுத்ததன் காரணமாக நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இதே போல் ராஜஸ்தான் அணிக்காக பென் ஸ்டோக் ரூ. 12.5 கோடி கொடுத்து எடுக்கப்பட்டார். அவரும் சோபிக்காததால் ராஜஸ்தான் அணிக்கு கடும் இழப்பு ஏற்பட்டதாக தான் தெரிகிறது.