March 12, 2019 தண்டோரா குழு
இந்திய அணி மீது பல்வேறு தரப்புகளில் இருந்து கருத்துகளும் விமர்சனம்களும் வரும் சுழலில், இலங்கையின் முன்னாள் சூழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இந்திய அணிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் 2 ஆட்டங்களில் இந்தியாவும், 3வது மற்றும் 4வது ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி ஒரு நாள் போட்டி டெல்லியில் நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்திய அணிமீது விமர்சனம்களும் எழுந்து வரும் சுழலில், இலங்கை அணியின் முன்னாள் சூழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தனியார் செய்தி நிறுவனத்திருக்கு அளித்த பேட்டியில் இந்திய அணிக்கு ஆதரவாக தான் கருத்தை தெரிவித்துள்ளார். அதில் ” நாம் பொறுமைதான் காக்க வேண்டும். இந்திய அணி நன்றாகவே ஆடிவருகின்றனர். உலகக்கோப்பைக்காக சிலபல சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். வெற்றியின் பாதையில் சிலபல தோல்விகள் ஏற்படவே செய்யும். ஏனெனில் 11 விராட் கோலிகளைக் கொண்டா ஆட முடியும். ஒவ்வொரு வீரரும் மேட்ச் வின்னராக இருக்க முடியாது.
சில போட்டிகளில் வெல்வோம், சில போட்டிகளில் தோல்விகள் தவிர்க்க முடியாதது. இல்லையெனில் ஒவ்வொரு அணியிலும் 11 விராட் கோலிகள், 11 சச்சின் டெண்டுல்கர்கள் 11 டான் பிராட்மேன்கள் தான் ஆட வேண்டும். இது சாத்தியமில்லை.
ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும். இந்திய அணி நன்றாக ஆடிவருகின்றனர். அவர்கள் மீது அதிக அழுத்தம் ஏற்றக்கூடாது. வீரர்களிடமிருந்து அழுத்தத்தை அகற்ற வேண்டும், அப்போதுதான் அவர்கள் ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியும், விரும்பத்தகுந்த முடிவுகளைக் கொண்டு வர முடியும் ” என அவர் தெரிவித்துள்ளார்.