September 3, 2019 தண்டோரா குழு
இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முக்கிய வீராங்கனையான மிதாலி ராஜ் டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முக்கிய வீராங்கனைகளில் ஒருவர் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட மிதாலி ராஜ். தற்போது இந்திய மகளிர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனாக இருந்து வருகிறார். 36 வயதான இவர் 89 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 2364 ரன்களை எடுத்ததுடன், டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்கள் எடுத்த முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
இந்நிலையில், டி20 கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இவர் தற்போது டி20 போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.