May 13, 2019 தண்டோரா குழு
12வது ஐபிஎல் போட்டியின் இறுதி போட்டி நேற்று நடந்தது. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் கடைசி பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. 4 -வது முறையாக மும்பை அணி ஐபிஎல் கோப்பையை வென்றது.
சென்னை வீரர்கள் அனைவரும் அதிர்ச்சியாக இருக்க, ஹர்பஜன் சற்று அதிக விரக்தியுடன் இருந்தார். கோபத்தில் பேட்டால் வேகமாக அடித்துவிட்டு அந்த இடம் விட்டு அங்கிருந்து எழுந்து சென்றார். இதற்கிடையில், வழக்கமாக அதிரடி வசனத்துடன் தமிழில் டுவிட் செய்து அசத்தி வரும் ஹர்பஜன் சிங் இம்முறை சோகமாக டுவீட் செய்துள்ளார்.
ஹர்பஜன் சிங் தனது முதலாவது ட்வீட்டில்,
“நேற்றைய போட்டியின் முடிவு எனது இதயத்தை நொறுக்கிவிட்டது. வேறு என்ன சொல்ல எனத் தெரியவில்லை. இந்த சீசன் முழுவதும் எங்களை சப்போர்ட் பண்ணின அனைவருக்கும் நன்றி. 4 -வது முறையாகக் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாழ்த்துகள். இப்போதும் நாங்கள் எப்படித் தோற்றோம் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை” என பதிவிட்டுள்ளார்.
பின்னர் தமிழில் ட்வீட் செய்த அவர்,
“தமிழ் மக்கள் மற்றும் @ChennaiIPL ரசிகர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், ஏதோ தங்கள் இல்லங்களில் ஒருவன் போல, அரவணைத்து அன்புசெலுத்திய உறவுகளின் இப்பண்பு, என்னை நெகிழச் செய்தது. மீண்டும் அடுத்த வருடமும் #CSK வுக்கு விளையாடுவேன் என்றே நம்பிக்கையோடு கண்கள் கலங்க விடைபெறுகிறேன்” – என பதிவிட்டுள்ளார்.தோற்றாலும் ஜெயித்தாலும் நாங்கள் எப்போதும் உங்கள் பக்கம் என ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.