June 8, 2017
tamilsamayam.com
வரும் 2022ல் கத்தாரில் கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுதும் ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்-கொய்தா தீவிரவாத அமைப்புகள் பெரும் அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. இந்நிலையில் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக கூறி, கத்தார் நாட்டுடன் தங்கள் உறவை முடித்துக் கொள்வதாக சவுதி, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
இதையடுத்து கத்தார் நாட்டுடன் தரை, கடல், வான்வழி தொடர்பை துண்டிக்க சவுதி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, கத்தார் நாட்டின் விமானங்கள், கப்பல்கள் அனைத்தும் இன்னும் இரண்டு வார காலத்தில் வெளியேற வேண்டும் என பஹ்ரைன் உத்தரவிட்டுள்ளது.
இந்த விஷயத்தில் கத்தாரும் இந்த விஷயத்தில் பிடிவாதமாக உள்ளது. அதனால், இந்த விஷயம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் வரும் 2022ல், கால்பந்து உலகக்கோப்பையை நடத்த சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) கத்தாரை தேர்வு செய்துள்ளது.
ஆனால், தற்போதைய நிலையில், இந்த பிரச்சனை காரணமாக, போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் அல்லது நிலைமையை சரி செய்ய வேண்டிய நிலையில் பிபா மாட்டிக்கொண்டுள்ளது. இதனால், 2022 உலகக்கோப்பை தொடர் நடப்பதில் சிக்கல் நிலவுகிறது.