December 14, 2018
தண்டோரா குழு
பேட்மிண்டன் வீரர்கள் கஷ்யப் ,சாய்னா நேவால் இன்று திருமணம் செய்து கொண்டனர்.
இந்தியாவின் பிரபல பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், ஒலிம்பிக், காமென் வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். ஐதராபாத்தை சேர்ந்த 28 வயதான சாய்னா நேவால், சக பேட்மிண்டன் வீரரும் ஐதராபாத்தை சேர்ந்தவருமான 32 வயது பாருபள்ளி காஷ்யப்பை காதலித்து வந்தார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மலர்ந்த நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது.
இதையடுத்து, டிசம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. அதைபோல் டிசம்பர் 20-ம் தேதியிலிருந்து ப்ரீமியர் பேட்மின்டன் லீக் தொடங்க இருப்பதால், சாய்னா – காஷ்யப் பிஸியாகிவிடுவர். எனவே, டிசம்பர் 16-ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், பேட்மிண்டன் வீரர்கள் கஷ்யப் ,சாய்னா நேவால் இன்று திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.