May 3, 2017
தண்டோரா குழு
தெற்கு ரயில்வேயின் கோட்டங்களிடையிலான கால்பந்து போட்டியில் சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை அணி வெற்றி.
கேரளா மாநிலம் கொல்லத்தில் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற்ற தெற்கு ரயில்வேயின் கோட்டங்களிடையிலான கால்பந்து போட்டியில் சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை அணி வெற்றி பெற்று கோப்பையை பெற்றுள்ளது.
இந்த அணி வெற்றி பெற்றதை அடுத்து வென்ற கோப்பையை, ரயில்வே பாதுகாப்புப் படை அணியினர் சேலம் கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மாவை சந்தித்து நேற்று (மே-2)காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த சந்திப்பின் போது அவர்களுடன் சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆணையர் சிவதாஸ் மற்றும் சேலம் கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் பெருமாள் நந்தலால் ஆகியோர் உடனிருந்தனர்.