February 22, 2018
tamilsamayam.com
பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் பிரசவத்திற்கு பின்னா் கிட்டத்தட்ட மரணத்தை அனுபவித்து மீண்டும் உயிர் தப்பிதாக கூறியுள்ளார்.
பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்கூக்கு கடந்த செப்டம்பா் மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு அலெக்சிஸ் ஒலிம்பியா ஒஹானியன் ஜூனியா் என்று பெயாிடப்பட்டுள்ளது. இந்நிலையில் செரீனா வில்லியம்ஸ் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கட்டுரையில், எனக்கு கடந்த செப்டம்பா் மாதம் பெண் குழந்தை பிறந்தது. மகள் பிறந்த நிலையில் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் குழந்தை பிறந்த 24 மணி நேரத்தில் எனது உடல்நிலையில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டது. இதன் பின்னா் நான் பிழைக்க மாட்டேன் என்று எண்ணிய தருனம் அது.
அந்த நேரத்தில் மருத்துவா்களும், செவிலியா்களும் மேற்கொண்ட சிறப்பான சிகிச்சையால் தான் மீண்டும் உயிர்ப்பிழைத்தேன். நுரையீரல் தொற்று நோய் தொடா்பாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ரத்தம் உறைந்த நிலையில் சிறந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்று மிகவும் உணா்வுப்பூா்வமாக கட்டுரை எழுதியுள்ளார்.
வெள்ளையா்களின் விளையாட்டாகவும், பணக்காரா்களின் விளையாட்டாகவும் கருதப்பட்ட டென்னிசில் கடந்த 1995ம் ஆண்டு கால் பதித்து முதல் கிரான்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.மேலும் அவா் டென்னிஸ் உலகில் கிட்டதட்ட 6 ஆண்டுகள் தரவரிசைப் பட்டியலில் தொடா்ந்து முதல் இடத்தில் ஆதிக்கம் செலுத்தியவா்.