June 28, 2017
tamil.samayam.com
தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைனுக்கு தனது வழக்கமான ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவக்.
இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் சேவக். சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி துவக்க வீரர்ரான இவர், சமீபத்தில் கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்தார். இருப்பினும் 140 வார்த்தைகள் கொண்ட டுவிட்டரில் தனது அதிரடியை தொடர்ந்த சேவக், தனது நகைச்சுவை உணர்வால் மேலும் அதிக ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் அதிரடியில் மட்டுமல்ல சரவெடி காமெடியிலும் தான் கிங் என்பதை டுவிட்டர் மூலம் நிரூபித்த சேவக், இன்று கோடிக்கணக்கில் ரசிகர்களை தன்வசம் ஈர்த்துள்ளார். இந்நிலையில் தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன் நேற்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடினார்.
இவருக்கு தனது வழக்கமான ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்துள்ளார் சேவக். இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,’கிரிக்கெட் ஜேம்ஸ் பாண்டு ஸ்டைன் ‘கன்’னுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஸ்ரெம்ப்களிலும், பேட்ஸ்மேன்களின் பாதங்களிலும் நீங்கள் விட்டுச்சென்ற ‘ஸ்டைன்’ (கறை) என்றுமே அழிக்கமுடியாது.’ என குறிப்பிட்டுள்ளார்.