July 11, 2017
tamilsamayam.com
இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் என்பதை கோலி இந்தியா வந்த பின்னர் அவரிடம் ஆலோசித்துவிட்டு அறிவிக்க உள்ளதாக கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் நேர்காணல் நேற்று நடந்தது. இந்நிலையில், புதிய பயிற்சியாளருக்கான போட்டியாளர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல் குறித்து, இந்திய கேப்டன் கோலியிடமும், அதே போல பயிற்சியாளர் எப்படி செயல்பட வேண்டும் என்ற கருத்தை கோலியிடமும் கேட்க உள்ளதாக, சச்சின், கங்குலி, லக்ஷ்மண் அடங்கிய இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது.
பயிற்சியாளர் ரெடி:
புதிய பயிற்சியாளர் அறிவிப்பது குறித்து கங்குலி தெரிவித்ததாவது,தேர்ந்தெடுக்கப்பட உள்ள புதிய பயிற்சியாளர் 2019 உலகக் கோப்பை தொடர் வரை ஒப்பந்தம் போட உள்ளோம்.
முன்னாள் வீரரும், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகரான சேவக்கின் விண்ணப்பத்தை நேரடியாக பரிசீலிக்கப்பட்டதுடன், பிசிசிஐ உயர் அதிகாரிகளுக்கும் பரிந்துரை செய்து அளித்துள்ளோம்.
நேர்காணலில், ரவி சாஸ்திரி மற்றும் டாம் மூடியின் விளக்கம் மிக அருமையாக இருந்தது. இந்த நேர்காணலில் முன்னாள் இந்திய வீரர் தொட்ட கணேஷ் அழைக்கப்படவில்லை, வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஆல்ரவுண்டர் பில் சிம்மோன்ஸ் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்தார்.
முடிவு செய்யும் கோலி:
வெஸ்ட் இண்டீஸில் இருக்கும் விராட் கோலி இந்தியா திரும்பிய உடன் அவரிடம் ஆலோசனை நடத்திய பின் தலைமை பயிற்சியாளர் அறிவிக்கப்படும்.என்ன தான் கோலி தன்னுடைய கருத்தை தெரிவித்தாலும், எங்களுக்கு பிடித்த நபர் தான் பயிற்சியாளராக கடைசியில் தேர்ந்தெடுக்கப்படுவார், அதற்காக சில நாட்கள் ஆனாலும் பரவாயில்லை என கங்குலி தெரிவித்துள்ளார்.