July 29, 2017
tamilsamayam.com
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற இந்திய அணிக்கு 8 விக்கெட் தேவை.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடக்கிறது. இந்திய அணி, முதல் இன்னிங்சில், 600 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில், 291 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
498 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் இன்றைய நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு கேப்டன் கோலி, டெஸ்ட் அரங்கில் தனது 17வது சதத்தை பூர்த்தி செய்த்தார். இதையடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில், 3 விக்கெட்டுக்கு 240 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 550 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.
இமாலய இலக்கை துரத்திய இலங்கை அணி இந்திய வேகத்தில் மீண்டும் ஆட்டம் கண்டது. முதலில் ஷமி வேகத்தில் தரங்கா (10) வெளியேறினார். குணதிலகா (2) உமேஷ் வேகத்தில் அவுட்டானார். இதையடுத்து நான்காவது நாள் உணவு இடைவேளையின் போது 2 விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்திருந்தது. குணரத்னே (44), மெண்டிஸ் (24) அவுட்டாகாமல் இருந்தனர்.