April 27, 2017
தண்டோரா குழு
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார்.
உடற்தகுதியில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ள விராட் கோலி, மற்ற வீரர்களுக்கும் முன் உதாரணமாகவும் திகழ்ந்து வருகிறார்.அவரது உடற்தகுதி நிலையை பல கிரிக்கெட் வீரர்கள் பாராட்டியுள்ளனர்.
உடற்கட்டமைப்புக்கு விராட் கோலி கொடுக்கும் முக்கியதுவத்தை போலவே அவர் கடும் உணவு கட்டுப்பாடுகளையும் கடைபிடித்து வருகிறார். அதிலும் தான் குடிக்கும் தண்ணீரிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறாராம்.
ஆரோக்கியம் தொடர்பான இணையதளத்தில் வெளியான தகவலின்படி, விராட் கோலி பிரான்சில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குடிநீரை தான் அருந்துகிறாராம். அதன்படி, அவர் அருந்தும் ஒரு லிட்டர் தண்ணீர் விலை ரூ.600 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.