March 9, 2017
tamilsamayam.com
இந்திய கேப்டன் கோலிக்கு இந்த ஆண்டுக்கான பாலி உம்ரேக்கர் விருதை இந்திய கிரிக்கெட் போர்டு (பிசிசிஐ.,) வழங்கியது.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் சிறந்த வீரர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவிப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான விருதுகள் நிகழ்ச்சி பெங்களூருவில் நடந்தது. இந்த விழாவில் இந்திய கேப்டன் கோலிக்கு பாலி உம்ரேக்கர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதன் மூலம் இந்த விருதை மூன்றாவது முறையாக பெறும் கோலி, இவ்விருதை மூன்று முறை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இவர் இந்த விருதை கடந்த 2011-12, 2014-15ல் வென்றார்.
இதே தமிழக வீரர் அஷ்வின், திலிப் சர்தேசாய் விருதை வென்றார். இதன் மூலம் இந்த விருதை இரண்டாவது முறையாக வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார் அஷ்வின்.