July 7, 2017
tamilsamayam.com
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய இந்திய கேப்டன் கோலி, ஜாம்பவான் சச்சினை ஓவர் டேக் செய்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள், 1 டி-20 போட்டிகளில் பங்கேற்றது. ஒரு அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டி, ஜமைக்காவில் நடந்தது. இதில் ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்தது.
எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் கோலி, சதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி, வெற்றி பெற்றது. இதில் சதம் அடித்த கோலி, சேஷிங் செய்யும் போது 18 சதம் அடித்து, முன்னாள் ஜாம்பவான் சாதனையை தகர்த்தார். இதற்கு முன் ஜாம்பவான் சச்சின், சேஷிங் செய்தபோது இந்திய அணிக்காக அதிகபட்சமாக 17 சதங்கள் (232 இன்னிங்ஸ்) விளாசி இருந்தார்.
இந்த மைல்கல்லை கோலி வெறும் 102 இன்னிங்சில் கடந்து புதிய சாதனை படைத்தார்.