January 2, 2019
தண்டோரா குழு
சச்சின் டெண்டுல்கரின் பயிற்சியாளர் ராமாகந்த் அச்ரேக்கர் மும்பையில் உயிரிழந்தார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரை வளர்த்து உருவாக்கிக் கொடுத்தவர் ராமாகந்த் அச்ரேக்கர்(87). தன் சிறுவயதில் சச்சின் டெண்டுல்கர் இவரின் தான் கிரிக்கெட் விளையாட்டை கற்றுக்கொண்டார். சச்சின் டெண்டுல்கரை அச்ரேக்கரிடம் அறிமுகப்படுத்தியது சச்சின் சகோதரர் அஜித். சச்சின் தன் சிறுவயதில் சிவாஜி பார்க் மைதானத்தில் அச்ரேக்கரின் கீழ் தன் கிரிக்கெட் வாழ்வை உருப்படுத்திக்கொண்டார். அதிலிருந்து குரு-சிஷ்ய உறவு இருவருக்கும் இடையே உறுதியாக வளர்ந்து வந்தது.
சச்சின் டெண்டுல்கர் மட்டுமல்லாது பிரவீண் ஆம்ரே, வினோத் காம்ப்ளி, சமீர் டீகே போன்ற வீரர்கள் மற்றும் பல்வீந்தர் சிங் சாந்து ஆகியோரையும் உருவாக்கியவர் ராமாகந்த் அச்ரேக்கர் தான். இவர் துரோணாச்சரியர் விருதும் பெற்றுள்ளார். 1932 ஆம் ஆண்டு பிறந்த அச்ரேக்கர் 1943-ஆம் ஆண்டு நியூ ஹிந்தி ஸ்போர்ட்ஸ் கிளப்பில் விளையாடத் துவங்கினார். 1963-64 கால கட்டத்தில் ஒரே ஒரு முதல்தர கிரிக்கெட் போட்டியில் மட்டும் அச்ரேக்கர் விளையாடியுள்ளார்.
இந்நிலையில், வயதானதால் ஏற்படும் நோய்களினால் பாதிக்கப்பட்டு வந்த ராமாகந்த் அச்ரேக்கர் புதனன்று மும்பையில் காலமானார். சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற போது அச்ரேக்கரின் பங்கை பெரிய அளவில் நெகிழ்ச்சியுடன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.