March 29, 2018
தண்டோரா குழு
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் ஆஸ்திரேலிய துவக்க வீரர் பேன்கிராப்ட்,பந்தை சேதப்படுத்தியது கேமராவில் பதிவானது. இதற்காக பேன்கிராப்டுக்கு, சம்பளத்தில் இருந்து 75 சதவீதம் அபராதமாக ஐ.சி.சி, விதித்தது.
மேலும்,கேப்டன் ஸ்மித் தெரிந்தே இந்த செயல் நடந்ததாக ஒப்புக்கொண்டார்.இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய கிரிக்கெட் ஆஸ்திரேலிய குழு, பந்தை சேதப்படுத்த திட்டம் போட்டுக்கொடுத்த ஸ்மித், வார்னருக்கு ஒரு ஆண்டு தடைவிதித்தது மற்றும்பேன்கிராப்ட்டுக்கு 9 மாதம் தடைவிதித்தது.
இதற்கிடையில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னர் விலகியுள்ளார். இதனையடுத்து, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு புதிய கேப்டனாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.