March 15, 2017
தண்டோரா குழு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியிலிருந்து இந்தியாவின் சஷாங் மனோகர் ராஜினாமா செய்தார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்த சஷாங் மனோகர் 2015-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.புதன்கிழமை சஷாங் மனோகர் தனது ராஜிநாமா கடிதத்தை ஐ.சி.சி. தலைமைச் செயல் அதிகாரியான டேவ் ரிச்சர்ட்சனுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்துள்ளார். இந்த ராஜிநாமா கடிதத்தில், பதவியை விட்டு விலகுவதற்காக தெளிவான காரணங்களை அவர் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும், தனிப்பட்ட காரணங்களுக்காக சஷாங் மனோகர் ராஜிநாமா செய்வதாகவும், அடுத்த தலைவர் நியமிக்கும் வரை தலைமைச் செயல் அதிகாரி கூடுதலாகத் தலைவர் பொறுப்பைக் கவனிப்பார் என்றும் சர்வதேச கிரிக்கெட் சங்க செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.