August 28, 2020 தண்டோரா குழு
சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல் கிரிக்கெட் அணியின் 12 பணியாளர்களுக்கும் ஒரு வீரரக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் துபாயில் நடைபெறவுள்ளது.இதற்காக எல்லா அணியும் துபாய் சென்றன.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 12ம் தேதி துபாய் சென்றது. வீரர்கள், பயிற்சியாளர்கள்,உதவி பணியாளர்கள் என 51 பேர் குழுவாக சென்றனர்.அங்கு அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமையில் இருந்தனர்.
இந்நிலையில், சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சாளர் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மற்ற வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளன.