March 2, 2020
தண்டோரா குழு
ஐபிஎல் போட்டியில் போட்டியில் சென்னை அணிக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் மீண்டும் களமிறங்கிய சென்னை அணி சென்ற சீசனில் ஒரு ரன் வித்யாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் கோப்பையை பறி கொடுத்தது. இதனால், சென்னை அணி ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். சென்னை அணி இம்முறை கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் சமூக வளைதளங்களில் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை அணி என்றாலே ரசிகர்கள் மனதில் வருவது தோனி தான். உலகக்கோப்பைக்கு பின்னர் தோனி இந்திய அணியில் விளையாடவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருந்து வருகின்றனர்.இந்நிலையில், சிஎஸ்கே அணியின் மகேந்திரசிங் தோனி, தனது வலைப் பயிற்சியை தொடங்குவதற்காக நேற்று (மார்ச் 1) சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையம் வந்திறங்கிய தல தோனிக்கு நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் உற்சாக வரவற்பு அளித்தனர். ரசிகர்களின் ஆராவாரத்திற்கு இடையில் அவர் சென்னையில் கால் பதித்தார். தல தோனியின் ரசிகர்கள், அவர் அடுத்த உலக கோப்பை வரை விளையாட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கான வலைப் பயிற்சியை தோனி முன்னதாகவே தொடங்க உள்ளார். இந்த சீசனில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை தோனி வெளிப்படுத்தும்பட்சத்தில் உலக கோப்பை டி20 அணியில் அவருக்கான இடம் உறுதி செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதால் அவர் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.