• Download mobile app
11 Apr 2025, FridayEdition - 3348
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிட்னி டெஸ்ட்: புஜாரா, பந்த் சிறப்பான ஆட்டம் – இந்திய அணி 622/ 7 டிக்ளர்

January 4, 2019 தண்டோரா குழு

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வென்றுள்ளது. இந்நிலையில், இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இந்திய அணியின் சார்பில் மயங்க் அகர்வால் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடினர். இதில், ராகுல் 9 ரன்களிலும் மயங்க் அகர்வால்77 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பின்னர் வந்த விராட் கோலி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய புஜாரா சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் புஜாரா அடித்த 18-வது சதம் இதுவாகும். இதற்கிடையில், ரகானே 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 90 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்து இருந்தது.

இதனை தொடர்ந்து இன்று 2வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. இதில், உணவு இடைவேளை வரை இந்தியா 117 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 389 ரன்களை எடுத்திருந்தது. புஜாரா 7 ரன்னில் இரட்டை சத வாய்ப்பை தவறவிட்டார். 193 ரன்கள் (373 பந்துகள் 22 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. ரிசாந்த் பந்த் 159 (189 பந்துகள், 15 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மேலும் படிக்க