May 4, 2017
tamilsamayam.com
மலேசியாவில் ஆண்டுதோறும் சுல்தான் அஷ்லான்சா ஹாக்கி கோப்பை போட்டி தொடர் நடைப்பெற்று வருகிறது.
இன்று இந்தியா பங்கேற்ற 4வது போட்டியில் ஜப்பானுக்கு எதிராக விளையாடியது. இதில் இரு அணிகளும் மாறி மாறி கோல் போட்டு போட்டியை விறு விறுப்பாக்கினர். இந்தியாவின் மன் தீப் சிங் ஹாட்ரிக் கோல் அடித்து இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற உதவினார்.
இதுவரை இந்தியா 4 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி, ஒரு தோல்வி, ஒரு போட்டி சமநிலையில் முடிந்துள்ளது. இதன் மூலம் இந்தியா இறுதிப்போட்டி முன்னேறுவதற்கு வாய்ப்பு இன்னும் நீடிக்கின்றது.