January 27, 2021 தண்டோரா குழு
14வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்.18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.ஏற்கனவே 13 தொடர்கள் நிறைவடைந்த நிலையில் 14வது ஐபிஎல் தொடருக்காக ஒவ்வொரு அணியும் தங்களுக்கான வீரர்களை தக்க வைத்தும் விடுவித்தும் வந்தன.
இந்நிலையில், 14வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்.18ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்பட்டுள்ளது.57 வீரர்களை அணிகள் விடுத்துள்ள நிலையில் ஏலம் நடைபெறவுள்ளது. சென்னையில் முதல் முறையாக ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.