May 13, 2017
தண்டோரா குழு
புரோ கபடி லீக்கில் தற்போது நான்கு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் சென்னை அணியை சச்சின் வாங்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.பி.எல்டி20 கிரிக்கெட் தொடரான ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஹாக்கி, மல்யுத்தம், பேட்மிண்டன், கபடி, கால்பந்து டென்னிஸ் போட்டிகளிலும் லீக் தொடர்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த வகையில், 2014-ம் ஆண்டு புரோ கபடி லீக் தொடர் துவங்கப்பட்டது.அதில், டெல்லி, மும்பை, பெங்களூரு,கொல்கத்தா, ஐதராபாத், பாட்னா, புனே மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய 8 நகரங்களை மையமாகக் கொண்டு 8 அணிகள் இதில் பங்கேற்றன. இதனால் கபடி போட்டிக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து, இனி வரும் புரோ கபடி தொடரில் கூடுதலாக தமிழ்நாடு, ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை மையமாக கொண்டு நான்கு அணிகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னை அணியை ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் வாங்கியது. இதில் சச்சின் டெண்டுல்கர் துணை உரிமையாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.