November 15, 2019 தண்டோரா குழு
2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து 5 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலம் டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக முன்பாகவே அணிகள் அனைத்தும் தங்களுக்குள் வீரர்களை மாற்றிக்கொண்டு வருகிறது. சென்னை அணி புதிய வீரர்களை மற்ற அணிகளிடமிருந்து இதுவரை வாங்கவில்லை. இந்நிலையில், தற்போது 5 வீரர்கள் சென்னை அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி மோஹித் சர்மா, டேவிட் வில்லி, துருவ் ஷோரே, சாம் பில்லிங்ஸ், சைதன்யா பிஷ்ணோய் ஆகியோர் அணியிலிருந்து விடுக்கப் பட்டுள்ளதாக சி.எஸ்.கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் கிடைக்கும் 8.4 கோடி ரூபாயை கொண்டு சி.எஸ்.கே அணிக்காக ஏலத்தில் புதிய வீரர்கள் தேர்தெடுக்கப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.