May 6, 2019 தண்டோரா குழு
ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் விளையாடியது.
மொஹாலியில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி கே.எல்.ராகுலின் (71) அதிரடியால் 18 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியின் 14வது ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் கேதர் ஜாதவ் பந்தை பிடிக்க சென்று கீழே விழுந்தார். இடது தோள்பட்டையில் காயம் அடைந்த அவர் வலியால் அவதிப்பட்டு உடனடியாக வெளியேறினார். இந்நிலையில், தோள்பட்டை வலி காரணமாக மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேதர் ஜாதவ் விளையாடமாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் அணி நாளை முதல் பிளே-ஆப் சசுற்றில் மும்பை அணியுடன் விளையாடவுள்ளது. உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியிலும் கேதர் ஜாதவ் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.