April 11, 2018
தண்டோரா குழு
சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான 5-வது ஐபிஎல் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“மெட்ராஸ்ல இருக்குது கிண்டி நீ ஓட்றதோ பெட்றோல் போட்ட வண்டி நீ அடிக்கிற பந்து பொயிற்மாடா என்ன தாண்டி @chennaiipl கூட ஆடுனா உனக்கு அல்லு கேரெண்டீ போயிறுவியா என் ஏரியாவ தாண்டி செம மேட்ச் மாமா,” என சென்னைத்தமிழில் வாழ்த்தியுள்ளார்.