July 5, 2017
tamilsamayam.com
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க லண்டன் வந்துள்ள டென்னிஸ் நட்சத்திரம் வீனஸ் வில்லியம்ஸ், செய்தியாளர்களின் கேள்வியால் கதறி அழ ஆரம்பித்தார்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கான செய்தியாளர் சந்திப்பில், வீனஸ் வில்லியம் கலந்து கொண்டு அவர்களின் கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு செய்தியாளர் உங்கள் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரு முதியவர் உயிரிழந்தது குறித்து கேள்வி கேட்டார்.
அதற்கு பதிலளித்த வீனஸ் வில்லியம், அதில் என் தவறு ஒன்றும் இல்லை என கூறியதோடு, சிறிது நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டு அழ ஆரம்பித்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
வீனஸ் வில்லியம்ஸ், கடந்த 9ம் தேதி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதிய விபத்தில், அந்த காரில் பயணம் செய்த ஒரு முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் வீனஸ் வில்லியம்ஸ் விதிமுறை மீறி காரை இயக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.