June 13, 2017
tamilsamayam.com
தென் ஆப்ரிக்காவுக்க கேப்டன் டிவிலியர்சுக்கு இந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் மிகவும் மறக்க முடியாத வகையில் அமைந்துள்ளது.
இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.
லண்டனில் நடந்த மிக முக்கியமான 11வது லீக் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்க அணியை எதிர்கொண்டது. இதில் 76 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த தென் ஆப்ரிக்கா, தவறுகளால், 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சுலப இலக்கை எளிதாக துரத்திய இந்திய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இதையடுத்து தென் ஆப்ரிக்க அணி, தொடரில் இருந்து வெளியேறியது. இந்த சோகத்துடன் சேர்த்து, அந்த அணி கேப்டன் டிவிலியர்சுக்கு தனது வாழ்நாளில் மறக்க முடியாத தொடராகவும் அமைந்தது. இத்தொடரில் 3 போட்டிகளில் பங்கேற்றுள்ள டிவிலியர்ஸ் மொத்தமாக 20 ரன்கள் (16,0,4) மட்டுமே எடுத்துள்ளார்.