July 10, 2017
தண்டோரா குழு
டி20 போட்டிகளில் இரட்டை சதமடித்து ஆப்கானிஸ்தான் வீரர் சபிக்குல்லா சாதனை படைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் உள்ளூர் டி20 தொடரான பாராகான் நங்கர்ஹர் சாம்பியன் கோப்பை தொடர் நடந்து வருகிறது.
அந்த தொடரில் கடீஸ் கிரிக்கெட் அகாடமி அணிக்காக விளையாடிவரும் சபிக்குல்லா, 21 சிக்ஸர்கள் மற்றும் 16 பவுண்டரிகள் உட்பட 71 பந்துகளில் 214 ரன்கள் குவித்தார். இதன் மூலம் காபூல் ஸ்டார் கிரிக்கெட் கிளப்புக்கு எதிரான போட்டியில் கடீஸ் கிரிக்கெட் கிளப் அணி 351 ரன்கள் குவித்தது.
352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய காபூல் அணி சபீக்கின் பாதி ரன்னை மட்டுமே எடுத்தது. அந்த அணி 107 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
கடந்த 2012, 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர்களில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் விளையாடியுள்ள ஷஃபாக், இதுவரை 35 சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 51 என்பது குறிப்பிடத்தக்கது.