July 16, 2021 தண்டோரா குழு
டி-20 உலககோப்பை கிரிக்கெட்; ஒரே பிரிவில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி-20 உலககோப்பை கிரிக்கெட்கொரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது.
குரூப்-1ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம்பெற்றுள்ளன.
குரூப்-2ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.
வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமிபியா, ஓமன், பப்புவா நியூ கினியா என 8 அணிகள் முதல் சுற்று ஆட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் இரு அணிகள் சூப்பர் 12 சுற்றில் இதர எட்டு அணிகளுடன் சேர்ந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.