May 19, 2018
tamilsamayam.com
கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.அந்த வகையில்,இந்த ஆண்டிற்கான 11வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 7ம் தேதி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில்,நேற்றைய 52வது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள சென்னை அணியும்,கடைசி இடத்தில் உள்ள டெல்லி அணியும் மோதுகின்றன.இதில்,டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி,20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. எட்டக்கூடிய இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி,10 ரன்கள் எடுத்த போது,ஒட்டுமொத்த டி-20 கிரிக்கெட்டில் 6000 ரன்கள் என்ற புது மைல்கல்லை எட்டினார்.
இதன்மூலம் சுரேஷ் ரெய்னா,விராட் கோலி,ரோகித் சர்மா,கவுதம் காம்பிர் ஆகியோரை தொடர்ந்து டி-20 கிரிக்கெட்டில் 6000 ரன்களை கடந்த ஐந்தாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார் தோனி.